பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கைகுலுக்கிக் கொள்ளாத இந்தியா பாகிஸ்தான் கேப்டன்கள்!

vinoth

செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (16:26 IST)
17 வது ஆசியக்கோப்பை (20 ஓவர்) போட்டிகள் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் இந்த போட்டிகளில் இந்தியா உட்பட 8 கிரிக்கெட் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் துபாயில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் பல விமர்சனங்கள் சர்ச்சைகள் எழுந்தன. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெறாதது கண்டனங்களைப் பெற்றது. ஆனாலும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணி பலமிக்க அணியாகதான் உள்ளது.

இந்நிலையில் சற்று முன்னர் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள் பங்கேற்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அஹா ஆகிய இருவரும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தாண்டிய தாக்குதல் நடந்ததால் அரசியல் ரீதியாக பிரச்சனைகள் நிலவி வருகின்றன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்