ஆசிய கோப்பை முதல் போட்டி.. ஆப்கானிஸ்தான் அபார வெற்றி.. இன்று இந்திய போட்டி..!

Siva

புதன், 10 செப்டம்பர் 2025 (08:34 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஹாங்காங் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 
 
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு களமிறங்கிய ஹாங்காங் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்ததால், ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டி இன்று இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி, வரும் செப்டம்பர் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்