100வது ரன்னை எடுக்க ஓடிவா என ஜடேஜா கிண்டல்.. பாதி தூரம் ஓடிவிட்டு திரும்பிய ஜோ ரூட்..!

Siva

வெள்ளி, 11 ஜூலை 2025 (08:01 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர இறுதியில், இங்கிலாந்து அணி 251 ரன்கள் எடுத்திருந்தது. 
 
இதில், ஜோ ரூட் அபாரமாக விளையாடி 99 ரன்கள் எடுத்திருந்தார் என்பதும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்கள் எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் களத்தில் உள்ளனர்.
 
இந்த நிலையில், நேற்றைய கடைசி ஓவரின் நான்காவது பந்தில், 98 ரன்கள் எடுத்திருந்த ஜோ ரூட், சதம் அடிக்க ஒரு ரன் ஓடினார். அவர் இரண்டாவது ரன்னை ஓடுவது போல் இருந்த நிலையில், பந்து ஜடேஜாவின் கைகளில் இருந்தது. 
 
உடனே ஜடேஜா, ரூட்டைப் பார்த்து "நூறாவது ரன்னுக்கு ஓடிவா" என்பது போல் பந்தை கீழே போடுவது போல் நடித்தார். 100வது ரன்னுக்கு ஓடினால் ரன் அவுட் ஆகிவிடுவோம் என்பதை புரிந்து கொண்ட ரூட், பாதி தூரம் ஓடிய நிலையில் திரும்பிவிட்டார்.
 
அதன் பிறகு, இருவரும் அதாவது ஜடேஜா மற்றும் ஜோ ரூட்  ஒருவர் ஒருவரை பார்த்து புன்னகை செய்து கொண்ட காட்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Edited by Siva

Rule #1: Never risk it with @imjadeja ????
Rule #2: If you forget Rule #1 ????#ENGvIND ???? 3rd TEST Day 2 FRI, JULY 11, 2:30 PM streaming on JioHotstar! pic.twitter.com/6chobVFsBL

— Star Sports (@StarSportsIndia) July 10, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்