இந்தியா – நியூஸிலாந்து இடையேயான டி20 தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியதை அடுத்து இப்போது கைல் ஜேமிசனும் விலகியுள்ளார்.
இந்தியா – நியூஸிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நாளை தொடங்கி நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்த போட்டிகளுக்காக நியூஸிலாந்து அணி வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். இந்நிலையில் இந்த தொடருக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்த்த நிலையில் டி20 தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெஸ்ட் தொடருக்கு தயாராவதால் டி20 தொடரில் அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து நியுசிலாந்து அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் துருப்பு சீட்டாக விளங்கும் கைல் ஜேமிசனும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக டி 20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.