டிரெஸ்ஸிங் ரூமில் நடப்பதை வெளியே கூற முடியுமா? அதிர வைக்கும் கோலி!!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (11:28 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமை பயிற்சியாளர் பதிவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியதை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


 
 
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி இன்று துவங்கவுள்ள நிலையில், கோலி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவரிடம் அனில் கும்ப்ளே பதவி விலகல்  விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு கோலி, டிரெஸ்ஸிங் அறையில் நடக்கும் விஷயங்களை பொது வெளியில் பேசுவது நாகரிகமாக இருக்காது. இதை நாங்கள் ஒரு கலாசாரமாக கடைபிடித்துவருகிறோம் என்று கூறி பதிலளிக்க மறுத்துவிட்டார்.
 
இந்நிலையில், கடந்த ஆண்டு (23.06.2016), அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது, கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் அனில் கும்ப்ளேவுக்கு வாழ்த்துச சொல்லி பதிவுசெய்திருந்தார். 
 
ஆனால், இன்று அந்த பதிவை தனதி பக்கதில் இருந்து நீக்கியுள்ளார். இது அனில் கும்ப்ளே மற்றும் கோலி இடையே எந்த அளவிற்கு மன கசப்பு இருந்தது என்பதை வெளிபடுத்துகிறது என்றும், கோலியின் இந்த செயல் மோசமானது என்றும் பலர் கருந்து தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்