மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய கிங் கோலி – இந்தியா அதிர்ச்சி தொடக்கம் !

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (08:20 IST)
விராட் கோஹ்லி

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி 9 ரன்களில் அவுட் ஆகி வெளியேறி ஏமாற்றம் அளித்துள்ளார்.

நியுசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் ஏற்கனவே தோற்றுள்ள இந்திய அணி தொடரையும் இழந்துள்ளது. இதையடுத்த் இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதல் அளிக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை பேட் செய்யுமாறு பணித்தது. அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த கேப்டன் கோலி 9 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி இக்கட்டான சூழலில் உள்ளது.

ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி இந்த தொடரில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுவரை இந்திய அணி 9 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 42 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது பிருத்வி ஷா 32 ரன்களுடனும் ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்