கே.எல்.ராகுல் அபார சதம்.. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் எவ்வளவு?

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (15:53 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி  8 விக்கெட் இழப்பிற்கு  208 ரன்கள் என்ற நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது

இந்த நிலையில்  இன்றைய இரண்டாவது நாளில் கே எல் ராகுல் நேற்று 70 ரன்கள் உடன் அவுட் ஆகாமல் இருந்த நிலையில் இன்று அபாரமாக சதமடித்தார். அவர் 101 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார்.

இந்த நிலையில் 67.4 ஓவர்கள் முதலில் விளையாடிய இந்திய அணி 245 ரன்கள் எடுத்துள்ளனர். இதையடுத்து தற்போது தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

ற்று முன்னர்  13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் தென் ஆப்பிரிக்கா எடுத்துள்ளது என்பதும் சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்