ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிய வீரர்! கடைசி நேரத்தில் டிவிஸ்ட்!
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (15:58 IST)
ஐபிஎல் போட்டிகளுக்காக அனைத்து அணி வீரர்களும் துபாய் சென்று வீரர்கள் தங்கியுள்ள நிலையில் இப்போது கே கே ஆர் அணியில் இருந்து ஒரு வீரர் விலகியுள்ளார்.
செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடக்க உள்ளன. இதற்காக 8 அணியைச் சேர்ந்த வீரர்களும் துபாய்க்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் ஹாரி கர்னி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருப்பதால் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.