இந்நிலையில் இணையதள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சி எஸ் கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ‘பயிற்சி விஷயமாக நான் தோனியிட்ம் பேசினேன். அப்போது அவர் ‘நாங்கள் 4-5 மாதங்களாக கிரிக்கெட் விளையாடவில்லை. அதனால் அணியின் வீரர்கள் அனைவரும் துபாய்க்கு செல்வதற்கு முன் சென்னையில் ஒன்றுக் கூட வேண்டும். நாங்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டும். அத்தகைய சூழல் துபாய் சென்ற பின்பும் எங்களுக்கு உதவும்' எனத் தெரிவித்தார். அதனால்தான் நாங்கள் சென்னையில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்.’ எனக் கூறியுள்ளார்.