இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. முதல் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு இந்த டெஸ்ட் வெற்றி பதிலடியாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் எடுத்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த தொடர் தற்போது இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதன் மூலம் சமன் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.