கொரோனாவால் கணவரை இழந்த கபடி வீராங்கனை… விளையாட்டுத்துறை அமைச்சகம் உதவி!

Webdunia
சனி, 22 மே 2021 (09:40 IST)
கர்நாடகாவைச் சேர்ந்த கபடி வீராங்கனையான தேஜஸ்வினி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் தேறி வருகிறார்.

இந்திய கபடி அணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் வீராங்கனையான வி.தேஜஸ்வினி பாய் மற்றும் அவரது கணவர் நவீன் ஆகிய இருவரும் மே 1 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தேஜஸ்வினி குணமாகி வருகிறார். ஆனால் அவர் கணவர் நவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் தேஜஸ்வினிக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்குவதற்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்