இங்கிலாந்து அணி சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வலது முழங்கையில் காயம் ஏற்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டாம் டெஸ்ட்டில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஸ்டூவர்ட் பிராட் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.