பவர் ப்ளேயில் கஞ்சனாக செயல்பட்ட ஆர்ச்சர் – இதுவரை யாரும் செய்யாத சாதனை!

வியாழன், 5 நவம்பர் 2020 (17:04 IST)
நடந்து வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸின் ஜோப்ரா ஆர்ச்சர் பவர் ப்ளேயில் மிகவும் சிக்கனாக பந்து வீசி சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் 2020 சீசனின் லீக் போட்டிகள் முடிந்து விட்டன. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மிக சிறப்பாக பந்துவீசி 20 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும் அவர் பவர் ப்ளேயில் மிகவும் சிக்கனமாக வீசி ஓவருக்கு 4.3 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். இது இதுவரை எந்த ஒரு பவுலரும் நிகழ்த்தாத சாதனையாகும்.

ஜோப்ரா ஆர்ச்சருக்கு அடுத்த இடத்தில் நரேன், முஸ்தாபிசுர் மற்றும் ஸ்டெயின் ஆகியோர் உள்ளனர்.

1.ஆர்ச்சர் - 14 ஆட்டங்கள் - 10 விக்கெட்டுகள் - 4.34 எகானமி (2020)
2.சுனில் நரைன் - 14 ஆட்டங்கள் - 2 விக்கெட்டுகள் - 4.50 எகானமி (2012)
3.ஆர்ச்சர் - 11 ஆட்டங்கள் - 3 விக்கெட்டுகள் - 4.75 எகானமி 2019)
4.சுனில் நரைன் - 15 ஆட்டங்கள் - 3 விக்கெட்டுகள் - 4.86 எகானமி (2013)
5.முஸ்தாபிசுர் - 13 ஆட்டங்கள் - 3 விக்கெட்டுகள் - 4.93 எகானமி (2016)
6.ஸ்டெய்ன் - 16 ஆட்டங்கள் - 5 விக்கெட்டுகள் - 5 எகானமி (2013)

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்