முதல் இடத்திற்கு நெருங்கும் ஜோ ரூட்.. ஐசிசி தரவரிசை!

புதன், 18 ஆகஸ்ட் 2021 (17:02 IST)
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் நோக்கி நகர்ந்து வருகிறார்.

சமீபகாலமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவ்ட் ஆஃப் பார்மில் இருக்கிறார். அவர் சர்வதேசப் போட்டிகளில் சதமடித்தே ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்டது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால் அவர் இப்பொது டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் இடத்தில் வில்லியம்சனும், இரண்டாம் மூன்றாம் இடங்களில் ஆஸியின் ஸ்டீவ் ஸ்மித்தும், மார்னஸ் லபுஷானும், நான்காம் இடத்தில் ஜோ ரூட்டும் ஐந்தாம் இடத்தில் கோலியும் உள்ளனர்.

முதலிடத்தில் உள்ள வில்லியம்ஸன் 901 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தால் 893 புள்ளிகள் பெற்றுள்ளார். இந்த தொடர் முடிவதற்குள் அவர் முதலிடம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்