அஜித் 61 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்… முதல் முறையாக தலயுடன் கூட்டணி!

புதன், 18 ஆகஸ்ட் 2021 (16:28 IST)
அஜித் 61 படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச் வினோத்தே இயக்கவும், போனி கபூர் தயாரிக்கவும் உள்ளார். இந்த படத்தின் அனைத்து முன் தயாரிப்பு வேலைகளும் முடிந்துள்ள நிலையில் அக்டோபர் மாதமே அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய இரு படங்களுக்கும் யுவன் இசையமைத்த நிலையில் அடுத்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்