டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து போட்டி ரத்து!

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (11:28 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போட்டி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் கூட போட முடியாத அளவில் போட்டி தொடங்கும் முன்பே மழை பெய்ததால் இந்த போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தது 
 
இருப்பினும் ஒரு சில மணி நேரம் காத்திருந்து மழை நின்றால் ஓவர்கள் குறைக்கப்பட்டு இந்த போட்டியை நடத்த நடுவர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தொடர்ந்து மெல்போர்ன் மைதானத்தில் மழை பெய்து வருவதையடுத்து இனிமேல் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளனர்
 
இதனை அடுத்து ஆப்கானிஸ்ஹான் மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் இந்த அளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மூன்று புள்ளிகள் பெற்றுள்ள அயர்லாந்து அணி தற்போது நியூஸிலாந்துக்கு இணையாக உள்ளது என்பதும் அந்த அணி இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரே ஒரு போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்