இரண்டே நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ஐபிஎல் ஃபைனல் டிக்கெட்டுக்கள்

Webdunia
வியாழன், 9 மே 2019 (20:16 IST)
வரும் ஞாயிறு அன்று ஐதராபாத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரின் ஃபைனல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் இரண்டே நிமிடங்களில் ஆன்லைனில் விற்று தீர்ந்ததால் ஐபிஎல் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து நாளை இரண்டாவது பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெல்லும் அணி வரும் ஞாயிறு அன்று மும்பை அணியுடன் மோதும்

இந்த நிலையில் ஃபைனல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. ஃபைனலுக்கு சென்னை அணி தகுதி பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் பலர் இந்த போட்டிக்கான டிக்கெட்டை வாங்க முயற்சித்தனர். ஆனால் ஃபைனல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் இரண்டே நிமிடத்தில் ஆன்லைனில் விற்று தீர்ந்தன. இதனால் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்