மும்பை வெற்றி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதா? பைனலில் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 22 மே 2017 (04:36 IST)
நேற்றைய ஐபிஎல் இறுதி போட்டியை பார்த்து கொண்டிருந்த அனைவருமே புனே அணிதான் கோப்பையை கைப்பற்றும் என்று நிஅனித்திருந்த நிலையில் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. இந்த போட்டியின் முடிவு குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலாவி வருகிறது.



 


குறிப்பாக கடைசி ஒரு ஓவரில் 11 ரன்கள் அடிக்க வேண்டும் என்பது ஒரு பெரிய இலக்கு அல்ல, ஆனால் ஜான்சனின் பந்துவீச்சில் கேப்டன் ஸ்மித் உள்பட மூன்று விக்கெட்டுக்கள் விழுந்ததை ரசிகர்களால் ஏற்று கொள்ளவே முடியாது. இதனால் இந்த முடிவு முன்பே தீர்மானிக்கப்பட்டதா? இது புக்கிகளின் கைவரிசையா என சந்தேகத்துடன் பலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.

ஐபிஎல் சூதாட்டக்களத்தில் புனே தான் வெற்றி பெறும் என்று பலர் கோடிக்கணக்கில் பணம் கட்டியிருந்ததாகவும், இதனால்தான் சூதாட்டக்காரர்கள் கடைசி ஓவரில் ஆட்டத்தின் போக்கை மாற்றியதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்கின்றனர் ஐபிஎல் நிர்வாகிகள். மும்பை அணி கடைசி வரை தன்னம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் போராடி பெற்ற வெற்றியை களங்கப்படுத்த வேண்டாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போட்டியின் முடிவு முன்பே தீர்மானிக்கப்பட்டதா? அல்லது திறமைக்கு கிடைத்த வெற்றியா? என்பதை கடவுள் ஒருவர் தான் அறிவார்.
அடுத்த கட்டுரையில்