2021 ஐபிஎல்: இந்தியாவில் 5 மைதானங்களில் மட்டும் நடத்த திட்டம்!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (17:49 IST)
2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற்ற நிலையில் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியை இந்தியாவிலேயே நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளை இந்தியாவின் குறிப்பிட்ட ஐந்து மைதானங்களில் மட்டுமே நடத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் வரும் 18ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த ஏலம் முடிந்தவுடன் ஐபிஎல் போட்டியின் அட்டவணை வெளியாகும் என்றும் கருதப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது உறுதி என்றும் ஆனால் பயணத்தை குறைக்கும் வகையில் ஒரு சில குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
 
குறிப்பாக மும்பை சென்னை பெங்களூரு கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய 5 இடங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அகமதாபாத் மைதானம் மிகவும் பெரியது என்பதால் அங்கு இறுதிப் போட்டியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது
 
மேலும் கொரோனா வைரஸ் பரிசோதனை, தனிமைப்படுத்துதலை கடைபிடிப்பது உள்ளிட்ட  அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்