2வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (22:29 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இன்று இந்தூரில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியிலும் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. எனவே முதலில் களமிறங்கிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் விஸ்வரூபத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. டி-20 போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா 118 ரன்களும், ராகுல் 89 ரன்களும் குவித்தனர்

261 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி சென்ற இலங்கை அணி ஆரம்பத்தில் 10 ரன்கள் என்ற ரன்ரேட்டில் அடித்தாலும், சாகல் மற்றும் குல்தீப் அபார பந்துவீச்சால் 17.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சாகல் 4 விக்கெட்டுக்களையும், குல்தீப் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிப்பதோடு தொடரையும் வென்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்