முதல் ஒருநாள் போட்டி: 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

புதன், 20 டிசம்பர் 2017 (22:24 IST)
இலங்கை அணிக்கு எதிராக இன்று கட்டாக்கில் நடந்த டி-20 போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது

டெஸ்ட், ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி இன்று கட்டாக்கில் இலங்கையுடன் முதல் டி-20 போட்டியில் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியதூ. இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 180 ரன்கள் எடுத்தது. ராகுல் 61 ரன்களும், தோனி 39 ரன்களும் எடுத்தனர்.

இதனால் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை அணி இந்திய பெளலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16 ஓவர்களில் வெறும் 87 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. சாஹல் 4 விக்கெட்டுக்களையும் பாண்ட்யா 3 விக்கெட்டுக்களையும் குல்தீப் 2 விக்கெட்டுக்களையும், உனாட்கட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்