உலகக் கோப்பை வில்வித்தை போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்திய இந்திய அணி இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது.
இறுதிப்போட்டியில் இந்திய பெண்கள் அணி சீன தைபேவிடம் மோதியது. இந்த போட்டியில் தோல்வியடைந்த இந்திய பெண்கள் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. தீபிகா குமாரி, லைஷ்ராம் பம்பேலே தேவி, லட்சுமி ராணி ஆகியோர் இந்திய பெண்கள் அணியில் இடம் பெற்றனர்.
மேலும் இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.