நான் இன்றைய போட்டியில் விளையாடியதே நகைச்சுவையானக் கதை… ஸ்ரேயாஸ் ஐயர் பகிர்ந்த தகவல்!

vinoth

வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (07:36 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த டி 20 தொடரில் அபாரமாக விளையாடி இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நேற்று நாக்பூரில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து 248 ரன்கள் சேர்த்தது.  இதன் பின்னர் ஆடிய இந்திய 39 ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது. இந்திய அணி சார்பில் ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் பேசும்போது “நான் இந்த போட்டியில் விளையாடியதே ஒரு நகைச்சுவையான கதை. நான் இன்றைய போட்டியில் இருக்க மாட்டேன் என்பதால் நான் முதல் நாள் இரவு தொலைக்காட்சியில் படங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது கேப்டனிடம் இருந்து அழைப்பு வந்தது. விராட்டுக்கு மூட்டில் சில பிரச்சனைகள் இருப்பதால் நாளைய போட்டியில் நீ ஆடப் போகிறாய் என்றார். நான் உடனடியாக எனது அறைக்கு சென்று தூங்க ஆரம்பித்தேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்