உலகின் பணக்கார கிரிக்கெட் நிர்வாகம்; என்ன பயன்? ரசிகர்கள் ஆவேசம்!!

சனி, 14 அக்டோபர் 2017 (17:53 IST)
கடந்த இரு வாரங்களாக ஐதராபாத்தில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகள் தண்ணீர் தேங்கியுள்ளது.


 
 
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டி20 போட்டி ஐதராபாத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மழையால் மைதானம் ஈரமாக இருந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. 
 
இதனால், நேற்றைய போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சம நிலையில் இருந்த நிலையில் மூன்றாவது போட்டியை ரசிகர்கள் அதிக அளவில் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். 
 
ஆனால், போட்டி ரத்து என அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் ரசிகர்கள் பிசிசிஐ குற்றம் சாட்டி வருகின்றனர். 
 
கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவில் அதிகம் என்பதால், கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலேயே பணக்கார கிரிக்கெட் நிர்வாகமாக பிசிசிஐ திகழ்கிறது. அதோடு கோடிகளில் வருமானம் ஈட்டி வருகின்றது.
 
அதிக வருமான இருந்து என்ன பயன் போட்டி நடத்த தகுந்த பராமரிப்பு இல்லை என கூறி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐ-ஐ கழுவி ஊற்றி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்