பணக்கார அராபிய ஷேக்குகளுக்கு பலியாகும் இந்திய சிறுமிகள்

வியாழன், 21 செப்டம்பர் 2017 (06:26 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 60 வயதுக்கும் மேலான ஒரு அராபிய ஷேக் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு ஓமன் நாட்டுக்கு செல்ல முயற்சிக்கும் வேளையில் போலீசாரிடம் பிடிபட்டதாக ஒரு செய்தி வெளியானது. தற்போது இதே போல் மேலும் எட்டு அராபிய ஷேக்குகள் சிறுமிகளை திருமணம் செய்ய முயன்றதாக தெரியவந்துள்ளது



 
 
கத்தார் நாட்டை சேர்ந்த 5 பேர் மற்றும் ஓமன் நாட்டை சேர்ந்த 3 பேர் மொத்தம் எட்டு பேர் சுமார் 50 முதல் 80 வயதுகளை உடையவர்கள் ஐதராபாத்தில் உள்ள புரோக்கர்கள் உதவியுடன் 15 முதல் 18 வயதான சிறுமிகளை திருமணம் செய்ய நடந்த முயற்சிகள் போலீசாரின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக முறியடிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் 4 லாட்ஜ் ஓனர்கள், ஐந்து புரோக்கர்கள் மற்றும் ஷேக்குகல் பிடிபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை  நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த கொடூரமான விஷயத்தில் இன்னும் பல புரோக்கர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்றும் அவர்களில் பலர் பெண்கள் என்றும் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அனைத்து புரோக்கர்களையும் ஒட்டுமொத்தமாக பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்