ஆசிய கோப்பை: இலங்கை அணிக்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு

செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (21:35 IST)
இன்றைய ஆசிய கோப்பை போட்டியில், இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து,  இலங்கைக்கு 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வரும் நிலையில் லீக் சுற்றுகள் முடிந்து, சூப்பர் 4 சுற்றுகள் நடந்து வருகிறது.

முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்தியா, கடைசிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது. இந்த நிலையில், இன்றைய போட்டியில் வாழ்வா, சாவா என்ற நிலையில், கட்டாயம் ஜெயித்தால் இறுதிப்போட்டிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது.

இன்றைய போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனால், இந்திய அணி பேட்டிங்கில் அசத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில்,  தொடக்க வீரர் ராகுல்  ரன்களில் வெளியேற, ரோஹித் சர்மா 72 ரன்கள் எடுத்து அணிக்கு பக்க பலமாக இருந்தார், இரண்டு போட்டிகளில் அசத்திய விராட் கோலி டக் அவுட் ஆனார். யாதவ் 34 ரன்களும் பாண்ட்யா 17 ரன்களும், பாண்ட் 17 ரன்களும், அஸ்வின் 15 ரன்களும் அடித்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து, இலங்கைக்கு 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய வீரர்கள் பந்து வீச்சிலும், ஃபீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டால் வெற்றிபெறலாம் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இலங்கை தரப்பில் முடுசங்கா 3 விக்கெட்டுகளும்ம், கருனரடனே  2 விக்கெட்டுகளும், ஷனகா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்