இந்திய அணியின் வெற்றி தொடர்கிறது. ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கியது

ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (22:20 IST)
இந்திய அணி சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 100% வெற்றியை பெற்று வீறுநடையுடன் தாயகம் திரும்பிய நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இன்று விளையாடியது



 
 
நீண்ட இடைவெளிக்கு பின்னர் சென்னையில் நடந்த இந்த போட்டியில் முதலில் இந்தியா பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 281 ரன்கள் குவித்தது 87 ரன்களுக்குள் கோஹ்லி உள்பட முக்கிய விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த இந்திய அணியை தல தோனி நிமிர்த்தினார். தோனி, பாண்டியா, ஜாதவ் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 281 ரன்கள் குவித்தது
 
இந்த நிலையில் ஆஸ்திரேலியா 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாட முற்பட்டபோது மழை குறுக்கிட்டது. இதனால் 21 ஓவர்களில் ஆஸ்திரேலியா 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு கொடுக்கப்பட்டது.
 
ஆனால் இந்திய அணியின் அதிரடி பந்துவீச்சால் ஆஸ்திரேலியா 21 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 
இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டி கொல்கத்தாவில் வரும் 21ஆம் தேதி நடைபெறும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்