2வது இன்னிங்ஸில் சுதாரித்து கொண்ட இந்தியா.. 2 தொடக்க வீரர்களும் அரைசதம்..!

Mahendran
சனி, 23 நவம்பர் 2024 (14:43 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட்போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாளில், இந்திய அணி 150 ரன்களுக்கு சுருண்டது. அதேசமயம், ஆஸ்திரேலியாவும் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய இரண்டாவது நாளில், ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர், இந்தியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் அரைசதம் அடித்தனர். இதில், ஜெய்ஸ்வால் 73 ரன்களுடன் விளையாடி வருகிறார். கே.எல்.ராகுலும் சிறப்பாக ஆடுகிறார்.
 
இந்த நிலையில், இந்தியா 184 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு பெரிய இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு அமைக்க இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்