மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்.. இந்தியா 3வது இடம்.. ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்தில் பாகிஸ்தான்..!

Mahendran

வியாழன், 9 அக்டோபர் 2025 (13:52 IST)
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி தான் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 
 
தொடர் முழுவதும் பாகிஸ்தான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று  நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளை எடுத்தும், ஆஸ்திரேலியா 221 ரன்களை எடுக்க அனுமதித்தது. 
 
பின்னர், 222 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான், வெறும் 114 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. தற்போது வரை மூன்று போட்டிகளில் விளையாடி பூஜ்ஜியம் புள்ளிகளுடன் இருக்கும் பாகிஸ்தான், நிகர ரன் ரேட்டிலும் மிகவும் பின்தங்கியுள்ளது. 
 
அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமானால், 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இனி எஞ்சியுள்ள 4 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்கு பாகிஸ்தான் ஆளாகியுள்ளது.
 
இந்த நிலையில் இந்திய மகளிர் அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா, இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து அணிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்