இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங்கில் திணறி வருகிறது
இன்று இரண்டாவது இன்னிங்சை இந்தியா தொடங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். கேஎல் ராகுல் 5 ரன்களிலும் ரோகித் சர்மா 21 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இதனை அடுத்து களத்தில் இறங்கிய கேப்டன் விராட் கோலி 20 ரன்களில் அவுட் ஆனதை அடுத்து இந்திய அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை 55 ரன்களில் இழந்துவிட்டது.
இந்தநிலையில் தற்போது விளையாடி வரும் புஜாரே மற்றும் ரகானே ஆகிய இருவரும் மிகவும் பொறுமையாக விக்கெட்டுகளை இழக்காமல் தடுப்பாட்டம் ஆடி வருகின்றனர். ரஹானே 100 பந்துகளில் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பார்க்கும் போது இந்திய அணி இந்த போட்டியை டிரா செய்ய முயற்சி செய்து வருவதாக தெரிகிறது