பும்ரா போல முதுகுவலிப் பிரச்சனை… ஆஷஸ் தொடரில் கம்மின்ஸ் விளையாடுவாரா?

vinoth

செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (10:47 IST)
பேட் கம்மின்ஸ் ஆஸி அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது அவர் தலைமையிலான அணி.

அதே போல பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரையும் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் அவர் கிரீடத்தில் மேலும் ஒரு சிறகு சூடப்பட்டுள்ளது. தொடர்ந்து வெற்றிகரமானக் கேப்டனாக வலம் வருகிறார்.

அடுத்து அவர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் முதுகுவலிப் பிரச்சனை காரணமாக கம்மின்ஸ் ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்