165 ரன்களில் ஆல்-அவுட் ஆன இந்தியா: நியூசிலாந்து அபார பந்துவீச்சு

Webdunia
சனி, 22 பிப்ரவரி 2020 (06:56 IST)
165 ரன்களில் ஆல்-அவுட் ஆன இந்தியா
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய முதல் நாளில் மழை காரணமாக 55 ஓவர்களில் போட்டி நிறுத்தப்பட்டது
 
நேற்று இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த நிலையில் இன்று இந்தியா 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து தற்போது நியூசிலாந்து அணி விளையாடி வருகின்றது
 
நியூசிலாந்து அணி 10 ஓவர்களில் 26 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன்னர் இசாந்த் சர்மா பந்தில் லாதம் அவுட் ஆனார் என்பதும் அவர் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது நியூசிலாந்து அணி 139 ரன்கள் பின்தங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
முன்னதாக முதல் இன்னிங்சில் இந்திய அணி விளையாடியபோது ரஹானே மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடி 46 ரன்கள் எடுத்தார் என்பதும், மயங்க் அகர்வால் 34 ரன்கள் எடுத்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்