மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 3-வது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா..!

Siva
வியாழன், 21 நவம்பர் 2024 (07:24 IST)
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் இறுதிப் போட்டி நேற்று நடந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்தியா மற்றும் சீனா இடையே இறுதிப் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணியின் தீபிகா ஒரு கோல் அடித்த நிலையில் அதன் பின்னர் இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனை அடுத்து இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணிக்கு இது மூன்றாவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016, 2023 ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்ற சீன அணி மூன்றாவது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

முன்னதாக மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஜப்பான் - மலேசியா அணிகள் மோதிய நிலையில் 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்