டி20 ரேங்கிங்: சரிந்தார் கோலி; முன்னேறிய ராகுல்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (09:17 IST)
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 8 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 

 
சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும் இங்கிலாந்தின் டேவிட் மலான் 2 வது இடத்திலும் உள்ளனர்.  
 
இதில் இந்திய கேப்டன் விராட் கோலி 8வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால், லோகேஷ் ராகுல் 5 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதே போல பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இலங்கையின் ஹசரங்கா, 2 வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஷம்ச உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்