கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (05:01 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய முக்கிய ஆட்டம் ஒன்றில் ஐதராபாத் அணி, பஞ்சாப் அணியை இரண்டு பந்துகள் மீதமிருக்கையில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.



 


நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் வாட்ஸன் 70 ரன்களும், ஓஜா 34 ரன்களும் எடுத்தனர்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் அணியை ஐதராபாத் வீழ்த்தியது.
அடுத்த கட்டுரையில்