ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 8வது போட்டி நேற்று ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், சாம்சன் சதத்தால் 198 ரன்கள் எடுத்தது. இருப்பினும் வெற்றி பெற தேவையான இலக்கை ஐதராபாத் அணி 19 ஓவர்களில் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இன்றைய வெற்றியால் ஐதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தை பிடித்தது. கொல்கத்தா முதலிடத்திலும் சென்னை இரண்டாமிடத்திலும், டெல்லி மூன்றாம் இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது