தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ஹரியானா அரசு ரூ.6 கோடி

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (12:01 IST)
50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ஹரியானா அரசு ரூ.6 கோடியை பரிசு தொகையாக அறிவித்துள்ளது. 
 
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உலக நாடுகள் பல பங்கேற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலர் பல பதக்கங்களை வென்று வருகின்றனர். 
 
இந்நிலையில் இன்று 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் தங்க பதக்கமும், சிங்க்ராஜ் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர். இதன் மூலம் இந்தியா பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 34வது இடத்தில் உள்ளது. 
 
இதனிடையே தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ஹரியானா அரசு ரூ.6 கோடியை பரிசு தொகையாக அறிவித்துள்ளது. இதே போட்டியில் வெள்ளி வென்ற சிங்ராஜ்ஜிற்கு ரூ.4 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்