மகனின் புகைப்படத்தை பகிர்ந்த ஹர்திக் பாண்டியா: இணையத்தில் வைரல்!

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (13:02 IST)
தனது மகனின் புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த ஹர்திக் பாண்டியா.
 
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பது தெரிந்ததே. 
 
இந்நிலையில் இவர்களது திருமணம் ஓரிரு மாதங்களில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் திருமணம் தள்ளிப் போனது.
 
திருமணம் தள்ளிப் போனாலும் நடாஷா கர்ப்பம் ஆனதாக ஹர்திக் பாண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும் கர்ப்பிணியாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவ்வப்போது அவர் பதிவு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தனது மகனை கையில் ஏந்திய புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்