தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக இருந்து வரும் சவுரவ், பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பிசிசிஐ செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா, பொருளாளர் பதவிக்கு பிசிசிஐயின் முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் இளைய சகோதரர் துமால் ஆகியோர் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ள நிலையில் தலைவர் பதவிக்கு கங்குலியை எதிர்த்து இன்னும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது