ரோகித், தவான் தேர்வு எதற்கு? சவுரவ் கங்குலி கேள்வி!

Webdunia
வியாழன், 11 ஜனவரி 2018 (17:01 IST)
கேப்டவுனில் நடந்த, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. தர்போது இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி.
 
கங்குலி கூறியதாவது, அயல்நாடுகளில் ரோஹித் சர்மா மற்றும் ம் தவானின் ஆட்ட வரலாறும் நன்றாக இல்லை. உள்நாட்டில் இவர்களது சாதனைகளுக்கும் அயல்நாடுகளில் இவர்களது ரன்களுக்கும் நிறைய வேறுபாடு தெரிகிறது. 
 
எனவே, போட்டி விராட் கோலி மற்றும் முரளி விஜய் ஆகியோரை நம்பியுள்ளது. இந்த தோல்வி எனக்கு அதிர்ச்சியாக இல்லை. இதற்காக பதற்றமடைய வேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு கோலி மீது மரியாதை உள்ளது, அடுத்த போட்டியில் மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்ப்பார்க்கிறேன். 
 
அணி தேர்வில், நான் பரிந்துரை செய்வதென்றால் ஷிகர் தவணுக்கு பதில் ராகுலை களமிறக்குவேன். ரோஹித் சர்மாவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என கங்குலி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்