நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், நேற்று நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.
இந்நிலையில் இந்த தோல்வியால் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆக்கிப் ஜாவேத் மற்றும் அவரது குழுவினர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பாகிஸ்தான் அணியில் பல பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு பின்னர் குறுகிய காலத்திலேயே நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.