நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், நேற்று நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.
கவாஸ்கர் “ இந்த பாகிஸ்தான் அணியை இந்திய பி அணியே நிச்சயமாக வென்றுவிடும். ஏன் பாகிஸ்தானில் திறமையான வீரர்கள் இப்போது இல்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. இந்தியாவில் ஐபிஎல் போல பாகிஸ்தானிலும் டி 20 லீக் உள்ளது.இருந்தும் ஏன் இந்தியா போல அவர்களிடம் திறமையான வீரர்கள் இல்லை என்பது தெரியவில்லை. கண்டிப்பாக இது குறித்து பாகிஸ்தான் ஆய்வு செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார்.