தினேஷ் கார்த்திக்கைக் கழட்டிவிட்ட பிசிசிஐ – ஆதரவு அளித்த ரசிகர்கள் & முன்னாள் வீரர்கள் !

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (16:21 IST)
ஆஸி அணிக்கு எதிரான இந்திய அணித் தேர்வில் இருந்து தினேஷ் கார்த்திக் கழட்டி விடப்பட்டதற்கு இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய வீரர்களின் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தொடர்தான் உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு முன்னர் இந்தியா விளையாடும் சர்வதேசத் தொடர் என்பதால் இதில் இடம்பிடிக்கும் வீரர்களே உலகக்கோப்பையிலும் இடம்பெறுவார்கள் என கூறப்பட்டது. இதனால் நேற்றைய அணித்தேர்வு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

அறிவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நல்ல ஆட்டத்திறனில் இருக்கும் தினேஷ் கார்த்திக் கழட்டி விடப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கே எல் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இந்திய மற்றும் குறிப்பாக தமிழக ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் வீரர்கள் பலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதில் சஞ்சய் மஞ்சரேக்கர் ‘தினேஷ் கார்த்திக்கை பிசிசிஐ தேர்வுக்குழு வெறும் டி20 வீரராக மட்டுமே பார்க்கத் தொடங்கிவிட்டது அவருக்கு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் கம்மியாக உள்ளன.’ எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் ‘ உலகக்கோப்பைத் தொடருக்கு தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக தேவை. அவரை தொடக்க வீரராகக் கூட களமிறக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நீக்கத்தை முன்னிட்டு டிவிட்டரில் ரசிகர்கள் பிசிசிஐ யின் அதிகாரப்பூர்வ பக்கத்தை டேக் செய்து தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்