இந்தியா-ஜிம்பாவே போட்டியை பார்க்க வந்த ரசிகருக்கு ரூ.6.50 லட்சம் அபராதம்!

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2022 (19:14 IST)
இந்தியா-ஜிம்பாவே போட்டியை பார்க்க வந்த ரசிகருக்கு ரூ.6.50 லட்சம் அபராதம்!
இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கிடையிலான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த போட்டியை காண வந்த ரசிகர் ஒருவருக்கு 6.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியா ஜிம்பாப்வே போட்டியின்போது கேப்டன் ரோகித் சர்மாவை பார்ப்பதற்காக திடீரென மைதானத்திலிருந்து ரசிகர் ஒருவர் ஓடிவந்தார். இதனை அடுத்து பாதுகாப்பு காவலர்கள் அவரை மடக்கிப்பிடித்து வெளியேற்றினர்
 
இந்த சம்பவம் காரணமாக மக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த ரசிகரை விசாரணை செய்த காவல்துறையினர் அவருக்கு 6.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனால் அந்த ரசிகர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்