இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் இனவெறி உள்ளது – நடுவர் குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (10:13 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் கண்ணுக்கு தெரியாத இனவெறி பாகுபாடு உள்ளதாக நடுவர்  ஜான் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்காக ஹேம்ப்ஷயர் அணிக்காக முதல் தர போட்டிகளை விளையாடியவரும் நடுவராக பணியாற்றியவருமான ஜான் ஹோல்டர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் இனவெறி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர் 1992 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் வெள்ளையினத்தல்லாதவர் யாருமே நடுவராக நியமிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் தான் நடுவராக பணிபுரிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு விண்ணப்பித்த போது அவர்களிடம் இருந்து முறையான பதில் வரவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அனுபவம் இல்லாத வீரர்கள் எல்லாம் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்