7வது டி20 போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (11:33 IST)
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 7வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து 4 - 3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது.
 
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 210 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது 
 
இதனால் இங்கிலாந்து அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே தலா மூன்று போட்டிகளில் இரு அணிகளும் வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதால் 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்