கிறிஸ் கெயில் அதிரடி சதம் வீண்: 361 இலக்கை அசால்ட்டாக அடைந்த இங்கிலாந்து!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (08:35 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்றது

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 360 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ்கெயில் அபாரமாக விளையாடி 135 ரன்கள் குவித்தார்.  ஹோப் 60 ரன்களும் பிராவோ 40 ரன்களும் எடுத்தனர்.

50 ஓவர்களில் 361 ரன்கள் என்ற இமாலய இலக்கை இங்கிலாந்து அணியினர் மிகவும் அசால்ட்டாக அடைந்தனர். இங்கிலாந்து அணி 48.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 364 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ராய் 123 ரன்களும், ரூட் 102 ரன்களும் எடுத்தனர். கேப்டன் மோர்கன் 65 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநால் போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்