திடீரென ரசிகர்களை இழக்கும் ஆர் சி பி அணி… பின்னணி என்ன?

vinoth

புதன், 23 ஜூலை 2025 (10:37 IST)
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே ஆர் சி பி அணி எப்போது கோப்பையை வெல்லும் என்பதுதான் பலருக்கும் இருந்த கேள்வி.  ஒருவழியாக 18 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு ஆர்.சி.பி. இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது ரஜத் படிதார் தலைமையிலான  அணி.

ஆனால் அந்த வெற்றியை முழுமையாகக் கொண்டாட முடியாத நிலையில் அந்த அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவம் ரசிகர்கள் நத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், சில சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு வருகிறது ஆர் சி பி அணி நிர்வாகம்.

இந்த நிலையில், ஆர்.சி.பி. அணியை விற்பனை செய்ய அதன் உரிமையாளர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளிலேயே அதிக பின்தொடர்பாளர்களைக் கொண்ட அணியாக ஆர் சி பி அணி இருந்தது. அந்த அணி இன்ஸ்டாகிராமில் 21.9 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டிருந்தது. இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததை அடுத்து அந்த அணி ரசிகர்களை இழந்துள்ளது. அந்த சம்பவத்துக்குப் பிறகு இன்ஸ்டாவில் அந்த அணீ 3 லட்சம் ஃபாலோயர்களை இழந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்