மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (19:37 IST)
.மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது
 
மேற்கிந்திய தீவுகள் அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற என்ற 399 ரன்கள் இலக்காக வைக்கப்பட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்சில் மே.இ.தீவுகள் அணி படு சொதப்பலாக விளையாடி வருகிறது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி உள்ளனர் என்பதால் அந்த அணி 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
இதனால் இங்கிலாந்து அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போட்டியில் வென்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
ஸ்கோர் விபரம்:
 
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 369/10
 
போப்: 91
பட்லர்: 67
பிராடு: 62
பர்ன்ஸ்: 57
 
மே.இ.தீவுகள் முதல் இன்னிங்ஸ்: 197/10
 
ஹோல்டர்: 46
டெளரிச்: 37
கேம்பெல்: 32
 
 
இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 226/2 டிக்ளேர்
 
பர்ன்ஸ்: 90
ரூட்: 68 அவுட் இல்லை
சிப்லே: 56
 
மே.இ.தீவுகள் 2வது இன்னிங்ஸ்: 129/10
 
ஹோப்: 31
பிளாக்வுட்: 23
புரூக்ஸ்: 22

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்