2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி: தொடரையும் வென்றது!

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (22:01 IST)
2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி: தொடரையும் வென்றது!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 22ஆம் தேதி தொடங்கியது
 
இந்த போட்டி இன்று முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி மிக அபாரமாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் தொடரையும் வென்று உள்ளதால் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு 381 ரன்கள் எடுத்தது இதனையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து 344 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 37 ரன்கள் முன்னிலையில் இருந்த இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் தொடங்கியபோது அந்த அணிக்கு பெரும் சோதனை காத்திருந்தது
 
அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 126 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இதனையடுத்து இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்து உள்ள இங்கிலாந்து அணியின் விரைவில் இந்தியா வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்